ஷென்சென்: சீனா மாஸ்டர்ஸ் 2026 பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா முதல் சுற்றுப்போட்டியில் தோல்வியடைந்தார். சீனாவில் உள்ள ஷென்சென் நகரில் நடைபெற்ற சீனா மாஸ்டர்ஸ் 2026 பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் வளர்ந்து வரும் வீராங்கனையான உன்னதி ஹூடா, உலகின் 12-ம் நிலை வீராங்கனையான தென் கொரியாவின் கிம் கா-உன்னை சந்தித்தார். இந்த போட்டியில் 21-10, 21-18 என்ற கணக்கில் உன்னதி ஹூடா தோல்வியடைந்தார்.
ஆண்கள் பிரிவு: ஆண்கள் இரட்டையர் பிரிவில், சீனாவின் சென் போயாங் மற்றும் லியு யி ஆகியோருக்கு எதிரான முதல் சுற்றில், முதல் செட்டில் 11-8 எனப் பின்தங்கியிருந்த நிலையில் இந்தியாவின் எம்.ஆர். அர்ஜுன் மற்றும் ஹரிஹரன் அம்சகருணன் ஆகியோர் போட்டியிலிருந்து விலகினர். சூப்பர் 750 பேட்மிண்டன் தொடரில் இன்று நடைபெறவுள்ள போட்டிகளில் இந்தியாவின் லக்ஷ்யா சென், கிடம்பி ஸ்ரீகாந்த், தன்வி சர்மா, தேவிகா சிஹாக் மற்றும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஆகியோர் களமிறங்க உள்ளனர்.



