Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

ஒன்றிய அரசின் தூண்டுதல் பேரில் நான் பேசுவதை தடுத்தது ஜனநாயகத்தின் மீதான ஒரு கறை: சபாநாயகருக்கு ராகுல்காந்தி கடிதம்

புதுடெல்லி: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்குக் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மக்களவையில் நான் பேசுவதைத் தடுத்தது மரபை மீறுவது மட்டுமல்லாமல், எதிர்க்கட்சித் தலைவர் என்ற எனது தகுதியில், தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் நான் பேசுவதைத் தடுப்பதற்கு ஒரு திட்டமிட்ட முயற்சி நடக்கிறது என்ற தீவிரமான கவலையை ஏற்படுத்துகிறது. தேசிய பாதுகாப்பு என்பது ஜனாதிபதி உரையின் ஒரு முக்கியப் பகுதியாகும். அதற்கு நாடாளுமன்றத்தில் விவாதம் தேவை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். அவையின் ஒரு பாரபட்சமற்ற பாதுகாவலராக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட ஒவ்வொரு உறுப்பினரின் உரிமைகளையும் பாதுகாப்பது சபாநாயகரின் அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்றப் பொறுப்பாகும்.

எதிர்க்கட்சித் தலைவருக்கும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் பேசுவதற்கான உரிமை நமது ஜனநாயகத்திற்கு ஒருங்கிணைந்த ஒன்றாகும் . இந்த அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பது ஒரு முன்னோடியில்லாத சூழ்நிலைக்கு வழிவகுத்துள்ளது. நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக, அரசாங்கத்தின் தூண்டுதலின் பேரில், ஜனாதிபதி உரை குறித்துப் பேசுவதிலிருந்து எதிர்க்கட்சித் தலைவரைத் தடுக்க சபாநாயகர் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். இது நமது ஜனநாயகத்தின் மீது ஒரு கறை. இதற்கு எதிராக எனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்கிறேன் என்றார்.