பணியிடங்கள் விவரம்:
1. நெட்வொர்க் அட்மினிஸ்டிரேட்டர்: 1 இடம். சம்பளம்: ரூ.40,000- ரூ.1,40,000. வயது: 30க்குள். தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ்/கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்/இன்பர்மேஷன் சிஸ்டம்/இன்பர்மேஷன் டெக்னாலஜி/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்/எலக்ட்ரிக்கல்ஸ்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன்/டிசைன் மற்றும் டெக்னாலஜி/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. அசிஸ்டென்ட் மேனேஜர் (விஜிலென்ஸ்): 1 இடம். சம்பளம்: ரூ.40,000- ரூ.1,40,000. வயது: 30க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடத்தில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி அல்லது எல்எல்பி தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. சேப்டி மேனேஜர்: 2 இடங்கள். சம்பளம்: ரூ.50,000-ரூ.1,60,000. வயது: 40க்குள். தகுதி: ஏரோநாட்டிக்கல்/மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/ஏவியோனிக்ஸ் ஆகிய பாடங்களில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. ஆபீசர் (சிபிஎம்எஸ்): 1 இடம். சம்பளம்: ரூ.40,000-ரூ.1,40,000. வயது: 30க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடத்தில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன் இதழியல் மற்றும் மக்கள் தகவலியல் பிரிவில் முதுநிலை டிப்ளமோ தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம்.
5. உதவி மேலாளர் (ஐடி): 1 இடம். சம்பளம்: ரூ.40,000-ரூ.1,40,000. வயது: 30க்குள். தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ்/கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்/இன்பர்மேஷன் சிஸ்டம்/இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் பி.இ., பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
கட்டணம்: ரூ.295/-. இதை Pawans Hans Limited என்ற பெயரில் டெல்லி, நொய்டாவில் மாற்றத்தக்க வகையில் ஏதேனும் ஒரு வங்கியில் டிடியாக எடுக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
www.pawanhans.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை பிரின்ட் அவுட் எடுத்து, சமீபத்தில் எடுக்கப்பட்ட போட்டோவை ஒட்டி, தேவையான சான்றிதழ்களின் நகல்கள் சுய சான்றொப்பம் செய்து, டிடியை இணைத்து அனுப்ப வேண்டிய முகவரி:
Head (HR), Pawan Hans Limited
(A Govt.of India Enterprise),
Corporation Office,
C-14, Sector, NOIDA- 201301 Z(U.P.).
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.01.2026.
பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 02.01.2026.


