இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ‘ரிட்ஸ்’ நிறுவனத்தில் 400 உதவி மேலாளர்கள் இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. உதவி மேலாளர் (மெக்கானிக்கல்): 150 இடங்கள். சம்பளம்: ரூ.23,340- ரூ.42,478. வயது: 40க்குள். தகுதி: மெக்கானிக்கல்/புரடக்சன்/ஆட்டோமொபைல்/மேனுபேக்சரிங்/மெக்காடிரானிக்ஸ்/ இன்டஸ்ட்ரியல் மேனுபேக்சரிங் ஆகிய ஏதாவதொரு பாடத்தில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. உதவி மேலாளர் ( எஸ் மற்றும் டி): 10 இடங்கள். சம்பளம்: ரூ.23,340- ரூ.42,478. வயது: 40க்குள். தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/இன்டஸ்ட்ரியல் எலக்ட்ரானிக்ஸ்/அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ்/இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் கன்ட்ரோல்/டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய ஏதாவதொரு பாடத்தில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. உதவி மேலாளர் (எலக்ட்ரிக்கல்): 55 இடங்கள். சம்பளம்: ரூ.23,340- ரூ.42,478. வயது: 40க்குள். தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/பவர் சப்ளை/ இன்ஸ்ட்ருமென்டேஷன்/பவர் எலக்ட்ரானிக்ஸ்/ டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. உதவி மேலாளர் (சிவில்): 120 இடங்கள். சம்பளம்: ரூ.23,340- ரூ.42,478. வயது: 40க்குள். தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,/பிடெக் பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
5. உதவி மேலாளர்:(கெமிக்கல்/மெட்டலர்ஜி): கெமிக்கல்-11 இடங்கள், மெட்டலர்ஜி-26 இடங்கள். சம்பளம்: ரூ.23,340- ரூ.42,478. வயது: 40க்குள். தகுதி: கெமிக்கல் இன்ஜினியரிங்/ பெட்ரோ கெமிக்கல்/மெட்டலர்ஜி ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. உதவி மேலாளர் (ஐடி): 14 இடங்கள். சம்பளம்: ரூ.23,340- ரூ.42,478. வயது: 40க்குள். தகுதி: சிஎஸ்இ/ஐடி/கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் பி.இ.,/பி.டெக்.,/எம்எஸ்சி/எம்சிஏ பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
7. உதவி மேலாளர் (பார்மா): 2 இடங்கள். சம்பளம்: ரூ.23,340- ரூ.42,478. வயது: 40க்குள். தகுதி: பி.பார்ம் பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
8. உதவி மேலாளர் (உணவு தொழில்நுட்பம்): 12 இடங்கள். சம்பளம்: ரூ.23,340- ரூ.42,478. தகுதி: உணவு தொழில்நுட்பம்/பயோ டெக்னாலஜி/ புட் பேக்கேஜிங் டெக்னாலஜி ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் பட்டப்படிப்பை முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 28.12.2025 தேதியின்படி கணக்கிடப்படும். எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒன்றிய அரசு விதிமுறைப்படியும் தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.600/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.300/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
https://www.rites.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை (25.12.2025).


