ஒன்றிய அரசின் சஞ்சார் சாதி செயலியை தங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவும் திட்டமில்லை: ஆப்பிள் நிறுவனம் தகவல்
டெல்லி: ஒன்றிய அரசின் சஞ்சார் சாதி செயலியை தங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவும் திட்டமில்லை என ஆப்பிள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. செல்போன் நிறுவனங்கள் சஞ்சார் சாதி செயலியை முன்கூட்டியே ஸ்மார்ட்போன்களில் பதிவேற்ற ஒன்றிய அரசு ஆணையிட்டது. திருடுபோன போன்களை கண்காணிப்பது, அவற்றை ப்ளாக் செய்வதை நோக்கமாகக் கொண்டது சஞ்சார் சாதி செயலி.ஆப்பிள், சாம்சங், ஜியோமி உள்ளிட்ட நிறுவனங்கள் சஞ்சார் சாதி செயலியை 90 நாட்களில் நிறுவ அரசு ரகசிய உத்தரவு பிறப்பித்தது.
சஞ்சார் சாதி செயலி முடக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்தது. சஞ்சார் சாதி செயலியை நிறுவும் ஒன்றிய அரசின் உத்தரவுக்கு ஆப்பிள் நிறுவனம் செவிசாய்க்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் இதுபோன்ற உத்தரவுகளை பின்பற்றுவதில்லை என அரசிடம் தெரிவிக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு, பிரைவசி பிரச்சனைகள் இருப்பதால் சஞ்சார் சாதி செயலியை நிறுவ முடியாது என ஆப்பிள் திட்டவட்டமாக தெரிவித்தது.