Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனத்தில் 110 இடங்கள்

துறை வாரியாக காலியிடங்கள் விவரம்:

1. மெக்கானிக்கல்: 59 இடங்கள் (பொது-26, பொருளாதார பிற்பட்டோர்-6, ஒபிசி- 15, எஸ்சி-8, எஸ்டி-4) இவற்றில் 6 இடங்கள் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

2. எலக்ட்ரிக்கல்: 27 இடங்கள் (பொது-12, பொருளாதார பிற்பட்டோர்-3, ஒபிசி-7, எஸ்சி-3, எஸ்டி-2). இவற்றில் 5 இடங்கள் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

3. கெமிக்கல்: 24 இடங்கள் (பொது-12, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-6, எஸ்சி-3, எஸ்டி-1). இவற்றில் 2 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

சம்பளம்: ரூ.40,000- ரூ.1,40,000.

வயது: 22.01.2026 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படியும் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/பவர் இன்ஜினியரிங்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்/கெமிக்கல் இன்ஜினியரிங்/அப்ளைடு கெமிஸ்டிரி ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் 65% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட கல்வித்தகுதியுடன் கேட்-2025 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கேட்-2025 தேர்வின் மதிப்பெண்கள், குழு விவாதம், நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு ஒரு வருட பயிற்சி வழங்கப்படும்.

கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.500/-. இதர பிரிவினருக்கு ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

www.nalcoindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தில் கேட்-2025 தேர்வு பதிவெண்ணை குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை (22.01.2026.)