அக்காலம் முதல் இக்காலம் வரை பெரும் பிரச்னை இந்த அக்குள் கருமைதான். அக்குளை வெள்ளையாக்க பலவிதமான லோஷன் அல்லது க்ரீம்களை வாங்கி பயன்படுத்தினாலும் எதிர்பார்த்த தீர்வுகள் கிடைப்பதில்லை. மாறாக சிலருக்கு அலர்ஜி களை உண்டாக்கும் அபாயமும் ஏற்படுகிறது. ஆனால் நம் வீட்டிலேயே இதற்கான இயற்கையான தீர்வுகள் இருப்பதை நாம் கவனிப்பதில்லை.
இதோ சில டிப்ஸ் கற்றாழை ஜெல்லானது பலவிதமான சரும பிரச்னைகளை இயற்கையாகவே சரிசெய்யும் திறன் கொண்டது. இதனால் தான் பலவிதமான சரும பராமரிப்பு பொருட்களில் கற்றாழை ஜெல் முக்கிய பொருளாக பயன் படுத்தப்படுகிறது. கற்றாழையுடன் எந்தெந்த பொருட்களைக் கலந்தால் எப்படிப்பட்ட தீர்வுகள் கிடைக்கும் எனப் பார்க்கலாம்.
வழி 1: ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் காபி பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 2-3 துளிகள் பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்தக் கலவையை அக்குள்களில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரால் அக்குளைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவு செய்து வந்தால் அக்குள் கருமை விரைவில் மறையும்.
வழி 2: ஒரு பௌலில் ½ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதில் 4-5 துளிகள் ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதை அக்குளில் தடவி, குறைந்தது 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் வெது வெதுப்பான நீரால் அக்குளை கழுவ வேண்டும். இப்படி தினமும் மேற்ெகாண்டு வந்தால், அக்குளில் இருக்கும் கருமை போகத் தொடங்கும். மஞ்சள் என்னதான் கழுவினாலும் அதன் நிறம் எப்படியேனும் உடைகளில் பட்டு கறை உண்டாக்கும். என்பதால் வெளிர் நிற உடைகளை அன்றைய தினம் தவிர்க்கவும்.
வழி 3: ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் 4 துளிகள் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதை அக்குளில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரால் அக்குளை கழுவவேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல பலனை விரைவில் பெறலாம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று வழிகளுமே அக்குளில் இருக்கும் கருமையைப் போக்க பெரிதும் உதவி புரியும் கற்றாழை பேக்குகள் ஆகும்.
அக்குள் கருமையைப் போக்க நினைப்பவர்கள், இவற்றுள் ஒன்றை தினமும் தவறாமல் பயன்படுத்தி வந்தால், நிச்சயம் விரைவில் கைகளுக்குக் கீழ் உள்ள கருமையை வெள்ளையாக்கலாம்.
குறிப்பு: இதே கலவையை நீங்கள் முகத்தின் கருமைக்கும் பயன்படுத்தலாம். வெயில் காலத்தில் உண்டாகும் கருமை, கருந்திட்டுகள், மேலும் சிலருக்கு பருக்கள், உண்டாகும் தருவாயில் இந்தக் கலவைகள் உதவும்.
- கவிதா பாலாஜிகணேஷ்


