Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு: 12, 13ம் தேதி நடக்கிறது

சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வருகிற 12, 13ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து ஆதிதிராவிடர் நல ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: 2025-26ம் கல்வி ஆண்டிற்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், காப்பாளர், இடைநிலை ஆசிரியர் மற்றும் காப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கு மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான இணைய வழி பொது மாறுதல் கலந்தாய்வு 12.6.2025 மற்றும் 13.6.2025 ஆகிய இரண்டு நாட்களில் காலை 10 மணி அளவில் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பணியிட மாறுதல் கோரி இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டும் இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.