Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

ஐநாவுக்கு பெண் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க சீனா ஆதரவு

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறை தொடங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் மிஷல் பாச்லெட் மற்றும் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டுப் பொதுச்செயலாளர் ரெபெக்கா கிரின்ஸ்பான் ஆகிய இரண்டு பெண்கள் உட்பட 4 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக பெண் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கான சீனாவின் நிரந்தர பிரதிநிதியும் தூதருமான பு காங் கூறுகையில்,‘‘ஒரு பெண் பொதுச்செயலாளரைப் பார்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். 80 ஆண்டுகள் கடந்துவிட்டன. எனவே ஒரு பெண் பொதுச்செயலாளர் கிடைத்தால் அதை கண்டு சீனா மிகவும் மகிழ்ச்சி அடையும்” என்று தெரிவித்துள்ளார்.