பெங்களூருவை சேர்ந்த அல்ட்ரா வயலட்டி நிறுவனம், புதிய எக்ஸ்47 எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளின் அடிப்படை வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது. இதில் 7.1 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 211 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம். 27 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். 2.8 நொடிகளில் 60 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும். இரண்டு புறமும் டிஸ்க் பிரேக்குகள் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த புதிய வேரியண்டில் ஹைபர் ரேடார் சிஸ்டம் மட்டும் இடம் பெறவில்லை. விபத்து அபாய எச்சரிக்கை, ஓவர் டேக் எச்சரிக்கை, விபத்து அபாயம் கொண்ட வளைவுகளில் எச்சரிக்கை உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதுதான் ஹைபர் ரேடார் சிஸ்டம். இந்த அம்சம் இல்லாததால் பைக்கின் விலை இதற்கு அடுத்த மாடலை விட சுமார் ரூ.15,000 குறைவு. புதிய வேரியண்டுடன் சேர்த்து அல்ட்ரா வயலட்டி எக்ஸ் 47 வரிசையில் மொத்தம் 6 வேரியண்ட்கள் உள்ளன. புதிய அடிப்படை வேரியண்டின் துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.2.49 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
+
Advertisement
