கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டு வரும் நிலையில், நாடு முழுவதும் கடும் மின் வெட்டை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். மின்சார துறையில் ரூ.886 கோடிக்கு ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. ஊழலை விசாரித்து வரும் லஞ்ச ஒழிப்பு பிரிவினர் ஏற்கனவே 5 பேரை கைது செய்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் 7 பேரை பிடித்து விசாரிக்கின்றனர். இந்த நிலையில், மின்சார துறை ஊழலில் அமைச்சர் கெர்மான கலுஷங்கோவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கலுஷங்கோவை சஸ்பெண்ட் செய்து பிரதமர் யுலியா ஸ்விரிடெங்கோ நேற்று அதிரடியாக உத்தரவிட்டார்.
+
Advertisement
