Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினர்: மாநில அரசின் அதிகாரம் பறிபோகும் ஆபத்து உள்ளதாக கல்வியாளர்கள் கருத்து

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினரை சேர்க்க தவெக அரசு ஒப்புக் கொண்டுள்ளது. தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினரை சேர்க்கக் கூடாது என்பதில் முந்தைய திமுக அரசு உறுதியாக இருந்தது. யுஜிசி உறுப்பினர் கூடாது என்பதில் கேரளா, மேற்கு வங்கத்தில் முந்தைய அரசுகளும் உறுதியாக இருந்தன. இந்நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினரை சேர்க்க தவெக அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் 15 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கப்பட வேண்டும். துணைவேந்தர் தேடுதல் குழுவில் 5 பேர் இடம்பெறுவர் என்று உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார். தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினரை சேர்க்க ஒப்புதால் ஆளுநர் அழுத்தத்துக்கு தவெக அரசு பணிந்தது. 3 பேர் தேடுதல் குழுவை 5 பேர் குழுவாக விரிவாக்கம் செய்வதால் மாநில அரசின் அதிகாரம் பறிபோகும் ஆபத்து உள்ளதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் ஆளுநர் வசம் செல்லும் ஆபத்து உள்ளது.

சங் பரிவார் அமைப்பினரையே பல்கலை. பேராசிரியர்களாகவும் நியமிக்கப்படும் ஆபத்து உள்ளது. துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினரை சேர்ப்பது கல்வியை காவிமயமாக்க வழிவகுக்கும். சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்தவரை துணைவேந்தராக ஆளுநர் நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளது. சங் பரிவார் அமைப்பினரையே பல்கலை. பேராசிரியர்களாகவும் நியமிக்கப்படும் ஆபத்து உள்ளதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.