Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

”குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க துணை நிற்போம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளான நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள சமூகவலைதள பதிவில், ”மனதை மயக்கும் மழலை மொழியாலும் - சின்ன சின்ன குறும்பாலும் - தூய அன்பாலும் - ஒவ்வொரு இல்லத்தையும் வண்ணமயமாக்குவது குழந்தைகள்.

இனிய குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின நாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழ்நாட்டுக் குழந்தைகளின் ஊட்டச்சத்து - ஆரோக்கியம் - கல்வி - விளையாட்டு என 360 டிகிரியில் யோசித்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க அவர்களின் முன்னேற்றத்துக்கு என்றும் துணை நிற்போம்! குழந்தைகளை எந்நாளும் கொண்டாடுவோம்,” என தெரிவித்துள்ளார்.