மும்மொழி கொள்கையை எதிர்ப்பதால் ஒன்றிய பா.ஜ.க. அரசு, அமலாக்கத்துறையை ஏவிவிட்டுள்ளது : துணை முதல்வர் உதயநிதி பேட்டி
திருவாரூர் : மும்மொழி கொள்கையை எதிர்ப்பதால் ஒன்றிய பா.ஜ.க. அரசு, அமலாக்கத்துறையை ஏவிவிட்டுள்ளது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பை திமுக எதிர்ப்பதால் ஒன்றிய பாஜக அரசு அமலாக்கத்துறையை ஏவிவிட்டிருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், அரசின் திட்டங்கள் மக்களுக்கு விரைவாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.


