Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

"யாரும் ஓடாதீங்கனு சொல்லிட்டு அவரு ஓடிட்டாரு" - முதல்வரின் செயலை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

சென்னை: டிஜிபி நியமனத்தில் மாநில அரசுக்கும், டிஜிபியைத் தேர்வு செய்யும் ஒன்றிய அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. டிஜிபி நியமனத்தில் ஒன்றிய அரசின் தலையீடு அதிகமாக இருப்பதாக திமுக அரசு கருதியது. இதற்காக நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. இதற்கிடையில், சட்டம்-ஒழுங்கைச் சீரமைக்க பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டார் என சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.

வரும் திங்கட்கிழமை நான் பேசும்போது யாரும் அவையிலிருந்து ஓடிவிடக்கூடாது” என பேசிவிட்டு, உடனடியாக அவையிலிருந்து வெளியேறிய முதல்வர் விஜய்யின் செயலை சுட்டிக்காட்டிய, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் " ஓடி விடாதீர்கள், என சொல்லிவிட்டு கடைசியாக ஓடிச் சென்றது என அனைவரும் பார்த்திருப்பீர்கள். சொல்லிவிட்டு ஓடிவிட்டாரா? இதைத்தான் நானும் சொன்னேன், 3 நாட்கள் கழித்து வந்து பதில் பேசுங்கள் என்று.. இவர் அப்போதே இதை செய்திருக்கலாம்.” என்று உதயநிதி ஸ்டாலின் நகைச்சுவையாக கூறினார்.