தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

U19 உலகக் கோப்பை; 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி 6வது உலகக்கோப்பை வென்றது இந்தியா!

 

Advertisement

ஹராரே: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 16ஆவது இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் ஜன.15இல் தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரேயில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 411 ரன்கள் எடுத்தது.

இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்தின் பந்து வீச்சை நாலாபுறமும் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசித் தள்ளினார். 80 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட வைபவ் சூர்யவன்ஷி தலா 15 சிக்ஸர்கள், பவுண்டரிகளுடன் 175 ரன்கள் குவித்தார். தொடர்ந்து 412 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 40.2 ஓவரிலேயே 311 ரன்கள் எடுத்து அல்அவுட் ஆனது. இதனால் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த அம்பரீஷ் 3 விக்கெட்டுகள், தீபேஷ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

இளையோர் உலகக்கோப்பை போட்டியில் 6வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதற்கு முன் 2000, 2008, 2012, 2018, 2022 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி கோப்பையை வென்றிருந்தது.

Advertisement

Related News