Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

யு-19 உலக டேபிள்டென்னிஸ்: வெள்ளி வென்ற இந்தியா

கிளஜ், நபோகா: ரோமானியாவின் கிளஜ்-நபோகா நகரில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான, உலக இளையோர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில் பங்கேற்ற அங்குர் பட்டாச்சார்ஜீ, பிரியனுஜ் பட்டாச்சார்யா, அபிநந்த் ஆகியோர் அடங்கிய இந்திய ஆடவர் அணி, நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஜப்பானுடன் 5 போட்டிகள் கொண்ட களத்தில் ஆடியது. இப்போட்டியில் ஜப்பான் வீரர்கள் முதல் 3 போட்டிகளில் அபாரமாக ஆடி வெற்றி பெற்றனர். அதனால், 3-0 என்ற புள்ளிக் கணக்கில் ஜப்பான் வெற்றி வாகை சூடி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. தோல்வி அடைந்த இந்திய அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. 15 வயதுக்கு உட்பட்ட மகளிர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் பெற்றது.