தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மணிப்பூரில் பயங்கரம்; குகி இன பெண்கள் 2 பேர் சுட்டுக்கொலை: மர்ம நபர்கள் அட்டகாசம்

 

Advertisement

கவுகாத்தி: மணிப்பூரில் குகி இன பெண்கள் 2 பேர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது. மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே 3ம் தேதி குகி, மெய்தி இன மக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது, வன்முறையாக மாறியது. இதனால் ஒரு மாதத்தில் மட்டும் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து ராணுவம் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக வன்முறை நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதுவரை 306 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என கடந்த வாரம் சட்டசபையில் அரசு தெரிவித்தது.

இந்த சூழலில், தமெங்லாங் மாவட்டம் லெய்சாங்பாய் கிராமத்தில் நேற்று வன்முறை தாக்குதல் நடந்தது. இதில் மர்ம நபர்கள், ஊருக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், குகி சமூகத்தின் பெண்கள் 2 பேரை கொன்று விட்டு தப்பினர். அவர்களில் ஒருவர் கிம்ஜல்ஹாய் சிங்சன் (28). இவர் நர்ஸ் படிப்பை முடித்து விட்டு, வீட்டுக்கு திரும்பியுள்ளார். மற்றொருவர் பல்னிசோங் (எ) சோங்கா சித்லோ (76). இவர், அவரது பண்ணையில் விறகு சேகரித்து கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் நீதி கிடைக்கும் வரை கொல்லப்பட்ட பெண்களின் உடல்களை பெற்றுக்கொள்ள மாட்டோம் என குகி அமைப்பு தெரிவித்துள்ளது.

சமீபத்தில், கடந்த 13ம் தேதி தமெங்லோங் மாவட்டத்தின் டால்லென் கிராமத்தில் மற்றும் நானி மாவட்டத்தின் லோங்பை கிராமத்தில் நடந்த வெவ்வேறு வன்முறை சம்பவங்களில் தம்பதி உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த சூழலில், நேற்று 2 பெண்கள் சுட்டு கொல்லப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொடர் சம்பவங்களால் குகி மற்றும் மெய்தி சமூகங்களுக்கு இடையே மீண்டும் கடுமையான பதற்றம் நிலவி வருகிறது.

Advertisement

Related News