Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரி*ப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மானகசேரியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் பலத்த தீ காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். கட்டிட ஈடுபாடுகளுக்குள் பலர் சிக்கி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மானகசேரியில் உள்ள ஹரிஷ்மா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. சந்தானபாண்டி என்பவருக்கு சொந்தமான இந்த பட்டாசு ஆலையில் 10 அறைகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட தொழிலார்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை திடீரென எதிர்பாராத விதமாக ஏற்பட்ட உராய்வின் காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த வெடி விபத்தில் இரண்டு பட்டாசு தயாரிக்கும் அறைகள் தரைமட்டமாகியுள்ளது.

வெடி விபத்தில் அங்கு வேலை பார்த்து வந்த காளிராஜன் என்பவர் பயங்கர தீ காயத்துடன் தற்போது சிவகாசி அரசு மருத்துவமணையில் தீவிர சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், கட்டிட இடிபாடுக்குள் சிக்கி ஆண் தொழிலாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும், சிவகாசி அருகே அனுப்பன்குளத்தில் வடிவேல் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உடல் சிதறி தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். வெவ்வேறு பட்டாசு ஆலைகளில் நேர்ந்த பட்டாசு விபத்துகளில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.