டிவிஎஸ் நிறுவனம், ஆர்பிட்டர் வி1 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பேட்டரி வாடகை திட்டத்துடன் அறிமுகம் செய்துள்ளது. இதில் 1.8 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. ஆர்பிட்டர் வரிசையில் வி1, வி2 என 2 வேரியண்ட்கள் உள்ளன. வி2 வேரியண்ட்டில் 3.1 கிலோவாட் அவர் பேட்டரி கொண்டது. முழுமையாக சார்ஜ் செய்தால் வி1 அதிகபட்சமாக 86 கிலோ மீட்டர் தூரமும், வி2 158 கிலோ மீட்டர் தூரமும் செல்லும் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது. 80 சதவீதம் வரை சார்ஜ் ஆவதற்கு வி1க்கு 2 மணி 20 நிமிடங்களும், வி2க்கு 4 மணி 10 நிமிடங்களும் ஆகும்.
வி1ல் 2 ஹெல்மெட்கள் வைக்கும் அளவுக்கு சீட்டுக்கு அடியில் 34 லிட்டர் கொள்ளவு இட வசதி, 14 அங்குல முன்புற வீல்கள், 12 அங்குல பின்புற வீல்கள், எல்சிடி டிஸ்பிளே உள்ளது. இத்துடன் மொபைலை இணைத்து அழைப்புகளை தெரிந்து கொள்ளலாம். ரிவர்ஸ் பார்க்கிங், ஹில் ஹோல்டு அசிஸ்ட், குரூஸ் கண்ட்ரோல், எக்கோ மற்றும் பவர் என 2 டிரைவிங் மோட்கள் என பல்வேறு அம்சங்கள் உள்ளன. வி1 ஷோரூம் விலை சுமார் ரூ.84,500. பேட்டரி வாடகை திட்டத்தின்படி ரூ.49,999 . பேட்டரி வாடகை திட்டம் மாதம் ரூ.862 முதல் துவங்குகிறது. 5 ஆண்டு அல்லது 70,000 கிலோ மீட்டர் வாரண்டி உள்ளது என நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.
