டிவிஎஸ் நிறுவனம், ஐகியூப் எஸ்-ல் 4.7 கிலோவாட் அவர் வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது. முன்பு சந்தையில் இருந்த இந்த மாடலில் 3.5 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றிருந்தது. தற்போது பேட்டரி திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 175 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம். மணிக்கு அதிகபட்சமாக 82 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். 4.3 நொடிகளில் 40 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும். முன்பறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்பறம் ஹைடிராலிக் டிவின் டியூப் ஷாக் அப்சர்வர் இடம் பெற்றுள்ளது. 7 அங்குல டிஎப்டி டிஸ்பிளே உள்ளது. புளூடூத் இணைப்பு வசதியும் உண்டு. இதன் மூலம் மொபைல் எஸ்எம்எஸ், அழைப்புகளை தெரிந்து கொள்ளலாம். மியூசிக் கண்ட்ரோல், வாய்ஸ் அசிஸ்டென்ட், நேவிகேஷன் வசதிகள், தற்போது பேட்டரியில் உள்ள சார்ஜூக்கு இன்னும் எவ்வளவு கிலோ மீட்டர் தூரம் செல்லலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். பார்க் அசிஸ்ட் உள்ளது. 3 வண்ணங்களில் கிடைக்கும். ஷோரூம் விலை சுமார் ரூ.1,66,933 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
+
Advertisement
