இங்கிலாந்தை சேர்ந்த நார்டன் நிறுவனத்தில் முதலீடு செய்த டிவிஎஸ்
இங்கிலாந்தை சேர்ந்த நார்டன் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் டிவிஎஸ் நிறுவனம் ரூ.2,321 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, நார்டன் நிறுவன மோட்டார் சைக்கிள்கள் டிவிஎஸ் மோட்டார் மூலம் இந்தியாவில் சந்தைப்படுத்தபட உள்ளன. மேன்க்ஸ் எக்ஸ், அட்லாஸ் , அட்லாஸ் ஜிடி உள்ளிட்ட மோட்டார் சைக்கிள்கள் இந்தியச் சந்தையில் அடுத்த ஆண்டில் அறிமுகமாக உள்ளன. இவற்றில் மேன்க்ஸ் வரிசை மோட்டார் சைக்கிள்கள் இங்கிலாந்தில் உள்ள நார்டன் தொழிற்சாலையிலும், அட்லாஸ் வரிசை மோட்டார் சைக்கிள்கள் டிவிஎஸ் நிறுவனத்தின் மூலம் ஓசூர் ஆலையிலும் உற்பத்தி செய்யப்பட உள்ளன. மேற்கண்ட மோட்டார் சைக்கிள்கள் இத்தாலியில் மிலன் மோட்டார் வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement