இத்தாலியில் சர்வதேச வாகன கண்காட்சியில் டிவிஎஸ்
இத்தாலியில் நடைபெற்று வரும் சர்வதேச மோட்டார் வாகன கண்காட்சியில் டிவிஎஸ் நிறுவனம் 6 புதிய டூவீலர்களை காட்சிப்படுத்தியுள்ளது. டிவிஎஸ் டேன்ஜென்ட் ஆர்ஆர் கான்செப்ட், டிவிஎஸ் இஎப்எக்ஸ் திரீ ஓ எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள், டிவிஎஸ் எம் 1 - எஸ் எலெக்ட்ரிக் மேக்சி ஸ்கூட்டர், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300, டிவிஎஸ் எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், டிவிஎஸ் ஆர்டிஆர் ஹைபர் ஸ்டென்ட் கான்செப்ட் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் எம்1 எஸ் 4.3 கிலோவாட் அவர் பேட்டரி கொண்டது. 12.5 கிலோவாட் மோட்டார் உள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 105 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும். முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம். டேன்ஜென்ட் ஆர்ஆர் கான்செப்ட் பைக் சூப்பர் ஸ்போர்ட் பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஆர்டிஆர் ஹைபர் ஸ்டென்ட் பைக், எடை குறைவான ஸ்டென்ட் பைக்காக உருவாக்கப்பட்டுள்ளது. அப்பாச்சி ஆர்டிஆர்-ஐ அடிப்படையாகக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டதாக நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.