Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தவெக பதவிகள் பணத்துக்கு விற்பனை: நிர்வாகி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த வீரனந்தபுரம் பகுதியை சேர்ந்த கோபி, தவெக ஒன்றிய இளைஞர் அணி பொருளாளர் என்ற பேனர் வைத்து உள்ளார்.இதை பார்த்த ஒன்றிய நிர்வாகி ஒருவர், யார் உனக்கு பொருளாளர் பொறுப்பு வழங்கியது? என்னை மீறி யார் வழங்கினார்கள் என அவரிடம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக கோபிநாத் பேசிய வீடியோவில், ‘‘பொறுப்பு வாங்கி தருவதற்கு தன்னிடம் பணம் பெற்றுக் கொண்டு, தற்போது அதிக பணம் கொடுத்த மற்றொரு நபருக்கு தான்வகித்த பொறுப்பை வழங்கி உள்ளனர்.

வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர், வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவர்களிடமும் ரூ.1 லட்சம் வரை பணம் பேரம் நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். சார்பு அணிகளின் பொறுப்புகளுக்கும் பணம் வசூலிக்கப்படுகிறது. கட்சி பணிக்கு மட்டும் நாங்கள் வேண்டுமா? பொறுப்பு, பதவி மட்டும் வேறு நபர்களுக்கா?’’ என்று பேசி உள்ளார்.