Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தவெக அரசு மீது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தந்த புகார் மனு தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம்

சென்னை: தவெக அரசு மீது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தந்த புகார் மனு தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் 2 தனி நபர்கள் பங்கேற்றது பற்றி உரிய சட்ட நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை வைத்துள்ளது. இனி இதுபோன்று நடைபெறாமல் தடுக்க முதலமைச்சருக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என பாஜக மனு அளித்துள்ளது.

இன்று (04.07.2026), பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அவர்கள், கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, அவர்கள் மற்றும் தமிழ்நாடு மாநில பொறுப்பாளர், அரவிந்த் மேனன், அவர்கள் இணைந்து, தமிழ்நாடு ஆளுநரை நேரில் சந்தித்து மனு ஒன்றை வழங்கினர்.

அந்த மனுவில், சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களைத் தவிர இரண்டு தனிநபர்கள் கலந்து கொண்டதாக குறிப்பிடப்பட்டு, அது சட்டவிரோதமான செயலாகவும், ரகசியக் காப்பு உறுதிமொழியினை மீறும் செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை கடுமையாக கண்டித்து, உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆளுநரிடம் கோரப்பட்டுள்ளது.

மேலும், இத்தகைய நிகழ்வுகள் இனி நடைபெறாதவாறு உறுதி செய்ய, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்குமாறும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில உயர் கல்வித்துறை அமைச்சர், பெ.விஸ்வநாதன், அவர்கள் ஒரு பெண் குழந்தை இடம் முறையின்றி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்படுகிறது அது குறித்து முறையான விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.