பட்டுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாஜ தீவரமாக யாரையும் எதிர்க்காது. கொள்கை ரீதியாகவே எதிர்க்கிறது. கரூர் விவகாரத்தில் விஜய் என்றில்லை. யாராக இருந்தாலும் தனிநபரை தாக்கி பேச பாஜ எப்போதுமே ஆதரவு தராது. தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த ஆதவ்அர்ஜுனா தவெக விற்கும், திமுக விற்கும் இடையேதான் போட்டி என்கிறார். இது விந்தையிலும் விந்தையான விஷயம். கட்சி ஆரம்பித்துள்ள தவெகவில் யாரும் ஒரு கவுன்சிலர் கூட ஆகவில்லை. பணத்தை வைத்து ஆட்சியை பிடித்துவிடலாம் என்று ஆதவ்அர்ஜூனா நினைக்கிறாரோ என்பது தெரியவில்லை. தேர்தல் வருவதால் தவெக கூட்டத்தை கூட்டி விடலாம். ஆனால் ஆட்சிக்கு வரனும் என்றால் மக்களின் நன்மதிப்பை பெறணும். எம்எல்ஏக்கள் வேண்டும். பாஜவில் மொத்தம் 300 எம்பிக்கள் உள்ளனர். 1,200 எம்எல்ஏக்கள் உள்ளனர். உலகத்திலேயே ஒரு மிகப்பெரிய கட்சி பாஜ. ஆனால் தவெக கட்சியில் ஒன்றும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
+
Advertisement
