Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

தவெக அரசின் பட்ஜெட் மிகப்பெரிய பூஜ்ஜியம்; திமுகவின் திட்டங்களில் "வெற்றி" என ஸ்டிக்கர்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: பள்ளிக்கல்வி, உயர்கல்வித்துறைக்கான நிதி குறைப்புக்கு உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். 2026-2027-ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்; 100 நாட்களில் தவெக அரசுக்கு பூஜ்ஜியம்தான் மதிப்பெண்ணாக வழங்க முடியும். பட்ஜெட்டுக்கும் பூஜ்ஜியம் மதிப்பெண்தான். வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்? என்ற கேள்விக்கும் தவெக அரசிடம் பதில் இல்லை.

மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில் பெயர் மாற்றம் மட்டுமே நடந்துள்ளது. திமுக அரசின் திட்டங்களுக்கு தவெக ஸ்டிக்கர் ஒட்டி அறிவித்துள்ளது. " `அன்பு சோலை' என நாங்கள் கொண்டு வந்த திட்டத்துக்கு `முதியோர் பொழுதுபோக்கு மையங்கள்' என்றும் `உலகம் உங்கள் கையில்' என்ற லேப்டாப் திட்டத்துக்கு `வெற்றி மடிக்கணினி திட்டம்' என்றும் `கலைஞர் கனவு இல்லம்' திட்டத்துக்கு `வெற்றி வீடு திட்டம்' என்றும் `முதல்வர் படிப்பகங்கள்' திட்டத்துக்கு `டிஜிட்டல் நூலகம்' என்றும் `நன்னிலம்' திட்டத்துக்கு `மண்ணின் மகள் திட்டம்’ என்றும் பெயரை மாற்றியிருக்கிறார்கள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்திய திட்டங்களையே பெயர் மாற்றி அறிவித்துள்ளார்கள். திமுக ஆட்சியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்தது. மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவெக அரசுக்கு தைரியம் இல்லை. சட்டமன்றத்தில் பட்ஜெட் குறித்து கேள்வி கேட்பதை தடுக்கவே என்னை கைது செய்து அலைக்கழிப்பு செய்தனர். தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கடந்த 5 வாரங்களில் 4 காவல் மரணங்கள் நடந்துள்ளன. ஜாதி ஆணவக் கொலைகள் நட்டதுள்ளன.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வாக்குறுதியில் சொன்னபடி நிறைவேற்றப்படவில்லை. தமிழ்நாட்டில் பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் தருவதாக முதல்வர் தேர்தல் பிரசாரத்தில் சொன்னார். ஆனால் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.