குலசேகரம்: தவெக தவறு செய்தால் நாங்கள் தட்டிக்கேட்போம் என காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் கூறினார். குமரி மாவட்டம் குலசேகரத்தில் மின்வாரியத்தின் புதிய அலுவலகக் கட்டிடத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருவர்களிடம் கூறியதாவது: டெல்லியில் இந்தியா கூட்டணி தேர்தல் கமிஷனுக்கு எதிராக போராட்டம் நடத்தியது.
தன்னிச்சையாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசினுடைய கைப்பாவையாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. ஏற்கனவே நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டார். இந்தப் போராட்டத்தை பொறுத்தவரையில் கொள்கை ரீதியாக தவெக ஆதரவு அளித்துள்ளது.
வெளியில் நடந்த போராட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ளாதது அவர்களுடைய விருப்பம். கொள்கை ரீதியாக அவர்கள் காங்கிரஸ் உடன் உள்ளனர். நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி. தற்போது அமைச்சராக உள்ளேன். அதிகாரத்தையும் அரசியலையும் ஒன்று படுத்தி பார்க்க முடியாது.
அதை தனித்தனியாக பார்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு என தனி கொள்கை உள்ளது. அவர்களுக்கு என தனி கொள்கை உள்ளது. அவர்கள் ஒன்றிய அரசிடம் இணக்கமாக இருந்து நிதியை பெறலாம் என நினைக்கலாம். எங்களைப் பொறுத்தவரையில் தவறு செய்தால் அதை தட்டிக் கேட்கும் இடத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


