தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தவெகவின் ஒரு மாத ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: பாஜ மூத்த தலைவர் தமிழிசை தாக்கு

சென்னை: தவெகவின் ஒரு மாத ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தமிழக பாஜ மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்தார். தமிழக பாஜ மூத்த தலைவர் தமிழிசை நேற்று விமானத்தில், சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ரூ.7,500 ஆயிரம் கோடியை பிரதமர் ஒதுக்கி உள்ளார்.

Advertisement

கூவம் உள்ளிட்ட நதிகளை சுத்தம் செய்ய, ஒன்றிய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. பக்கிங்காம் கால்வாய் சுத்தம் செய்ய நிதி ஒதுக்கியது மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்கள், அரசு மருத்துவமனை வேலை நேரத்தில், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க கூடாது என்ற தமிழக மருத்துவ துறை அமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன். கடந்த காலங்களில் மருத்துவர்கள் குறைவாக இருந்தார்கள்.

அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைக்கு சென்று சேவை செய்தார்கள். ஆனால், இப்போது மருத்துவர்கள் அதிகமாக இருக்கின்றனர். எனவே அரசு மருத்துவர்கள், தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. தவெகவின் ஒரு மாத ஆட்சியில், சட்டம் - ஒழுங்கை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். கஞ்சா, போதை பழக்கத்தை அதிகம் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளன.

தற்போது சிங்கப்பெண் அதிரடிப்படை அமைக்கப்பட உள்ளது. எனவே, குற்றங்களை, இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். ஊழலை கட்டுப்படுத்த வேண்டும். சிஎம்டிஏவில், 15 நாளில் 300க்கும் மேற்பட்ட அனுமதிகள் தரப்பட்டு உள்ளன. மின்சார துறை முறைகேடு ஒரு வாரம் கழித்து தான் சிபிசிஐடியிடம் ஒப்படைத்து உள்ளார்கள்.

இதில் உள் நோக்கம் இருக்கிறதா? யாரையாவது காப்பாற்ற முயற்சி நடந்ததா என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும். இந்த புதிய ஆட்சி, இன்னும் அதிக கவனத்துடன் ஆட்சி செய்ய வேண்டும். அனைத்துக்கும் போன ஆட்சி மீது குறை சொல்லாமல், நடக்கும் தவறுகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கி செயல்பட வேண்டும்.

 

Advertisement