Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கடினமான காலங்களுக்கு தயாராகுங்கள் தவெக ஆட்சியில் தமிழகம் அழிவின் விளிம்பில் உள்ளது: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: கடினமான காலங்களுக்கு தயாராகுங்கள். தவெக ஆட்சியில் தமிழகம் அழிவின் விளிம்பில் உள்ளது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

காலையில் கடந்து வந்த இரு செய்திகள். 1. ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே தவெக ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது. 2. தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் தவெக அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த தமிழ்நாட்டின் முதலீட்டு மேம்பாட்டு முகமை அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ஈகோவுக்கு காவு கொடுக்கப்பட்டு விட்டது.

எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக ரிவர்ஸ் கியரில் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதல்வரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து ஷோ காட்டக் கிளம்பி விட்டார். கடினமான காலங் களுக்கு தயாராகுங்கள். டிவிகே அரசின் கீழ் தமிழ்நாடு அழிவின் விளிம்பில் உள்ளது. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது