கரூரில் 40 பேர் இறந்ததை மனதில் வைத்து செயல்படும்படி தவெகவினருக்கு காவல் அதிகாரி ஈஷா சிங் எச்சரிக்கை!!
புதுச்சேரி : கரூரில் 40 பேர் இறந்ததை மனதில் வைத்து செயல்படும்படி தவெகவினருக்கு காவல் அதிகாரி ஈஷா சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாஸ் இல்லாதவர்களையும் உள்ளே அனுமதிக்குமாறு கேட்ட தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்துக்கு போலீஸ் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். கூட்டம் காட்ட வேண்டும் என்பதற்காக பாஸ் இல்லாதவர்களையும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என ஆனந்த் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


