Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

உறுதியாக தவெக ஆட்சி தானாக விழுந்துவிடும் -டிடிவி தினகரன் விமர்சனம்

சென்னை: தமிழக ஆளுநரை அர்லேகருடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து பேசினார். பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழநாட்டில் 23ம் புலிகேசி ஆட்சி நடப்பதை கன்கூடாக பார்த்துக்கொண்டுள்ளோம்.

தவெக ஆட்சியில் தமிழ்நாட்டில் விலை வாசி உயர்வு, மற்ற மாநிலங்களை விட அதிகமாகியுள்ளது. பொருளாதார நிபுணர் கலையரசனை போலீசார் கைது செய்தது சட்டவிரோதமானது என்றும், சினிமாவில் மிரட்டுவதை போல முதல்வர் விஜய்யும், அவரது கைத்தடிகளும் மிரட்டிப்பார்க்க நினைக்கிறார்கள், மேலும் தவெக அமைச்சர்கள் அடிக்கிற கூத்துக்கு அவர்கள் நிச்சயம் நீதிமன்ற வழக்கில் சிக்குவார்கள், அதிலும் அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.

இவர்கள் இடைத்தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் மாவட்டங்களை தேர்ந்தெடுத்து முதல்வர் சுற்றுப்பயணம் மேற்றுக்கொள்கிறார். தொழில் நிறுவனங்களை மற்ற மாநிலங்களுக்கு செல்லும் அவலம் உருவாகி உள்ளது, தமிழ்நாட்டையே தனியார்மயமாக ஆக்கியுள்ளது தவெக அரசு, "உறுதியாக விரைவில் இவர்களுக்கு ஒரு முடிவு வரும்” ஆட்சி தானாக விழுந்துவிடும் என டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.