தவெக வேளாண் பட்ஜெட்: துளித் துளித் தண்ணீர் திட்டத்திற்கு ரூ.785 கோடி, பெண்களுக்கான ட்ரோன் பயிற்சி மற்றும் வான் மகள் திட்டம் அறிவிப்பு!
சென்னை: தமிழக பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய வேளாண் துறை அமைச்சர் வினோத், வெங்காய சேமிப்புக் கிடங்குகள் அமைப்பதற்காக ரூ.22 கோடி மதிப்பீட்டில் 57 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு வசதிகள் உருவாக்கப்படும். விவசாயிகளை காக்கும் வான் மகள் திட்டம் உருவாக்கப்படும் அதற்க்கு ரூ. 4 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
பெண்கள் உள்ளிட்ட விவசாயிகளுக்கு ட்ரோன் இயக்கும் பயிற்சி வழங்க ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். என்று வேளாண் துறை அமைச்சர் வினோத் கூறியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் அரசு பண்ணையில் உள்கட்டமைப்பு ரூ.2 கோடியில் மேம்படுத்தப்படும். 100% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகள் உருவாக்குதல் மற்றும் 75%மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகளை தூர் வாருதல் போன்றவை மேம்படுத்தப்படும்.
வேளாண் பட்ஜெட்டில் நீர் மேலாண்மைக்கான துளித் துளித் தண்ணீர் திட்டத்திற்கு ரூ.785 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் 2.2 இலட்சம் ஏக்கர் 95,000 விவசாயிகள் வழங்கப்படும். ரூ.8.13 கோடியில் 50 ஒருங்கிணைந்த வேளாண் இயந்திர வாடகை வணிக மையங்கள் அமைக்கப்படும். வேளாண் இயந்திரங்களை பழுதுநீக்கி பராமரிக்கும் 15 மையங்கள் அமைக்க 50% மானியம் மற்றும் ரூ.1.12 கோடி ஒதுக்கீடு என்று அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். தஞ்சையில் வேளாண் இயந்திரங்கள் குறித்த மாபெரும் கண்காட்சி நடத்தப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
