Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தவெக ஆட்சிக்கு அக்.6ம் தேதி மக்கள் சரியான பாடத்தை புகட்ட வேண்டும்: தாராபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

தாராபுரம்: தாராபுரம் இடைத்தேர்தல் வருகிற 6ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை 9ம் தேதி நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் வழக்கறிஞர் சுகன்யா போட்டியிடுகிறார். சுகன்யா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து திமுக தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தாராபுரம் தொகுதியில் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

தமிழக எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி மற்றும் திராவிடர் கழகத்தலைவர் வீரமணி, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட திமுக கூட்டணி கட்சித் தலைவர்களும் பலர் பிரசாரம் செய்து வருகிறார்கள். அந்தவகையில் இன்று தாராபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர்; "சட்டமன்றத் தேர்தலில் வெறும் 107 இடங்களை மட்டுமே தவெக வென்றது. திமுக கூட்டணி கட்சிகளின் தயவில்தான் தவெக ஆட்சி அமைத்தது. திமுகவின் சாதனை சொல்லி வென்றவர்களால் தவெக ஆட்சி நடக்கிறது. அதிமுகவை உடைத்து எம்.எல்.ஏ.க்களை பெட்டிகளை கொடுத்து முதல்வர் வாங்கிவிட்டார். சட்டமன்றத்தில் தவெக எம்.எல்.ஏ.க்கள் பாட்டு பாடுகின்றனர்.

சட்டப்பேரவையில் இன்னும் சண்டை, நடன காட்சிகள் மட்டுமே பாக்கி. பேரவை, பரப்புரையில் முதல்வர் விஜய் பேசுவதில்லை; கத்த மட்டுமே செய்கிறார். சட்டப்பேரவையில் காதல் தோல்வி குறித்து எல்லாம் தவெக எம்.எல்.ஏக்கள் பேசுகின்றனர். முதல்வரின் சொந்த தொகுதியிலேயே மின்வெட்டு பிரச்சனை; அமைச்சர்கள் நிகழ்ச்சிகளில் மின்வெட்டு. த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்து தொடர்ந்து 8 மணி நேரம் மின்வெட்டு.

த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டு, அரிவாள் வெட்டுக்கு இடையேதான் போட்டி. 100 நாள் வேலை திட்டத்தில் 10 நாட்கள்கூட தவெக அரசு வேலை கொடுப்பதில்லை. 100 நாள் வேலை திட்டத்தில் முறையான ஊதியம் தருவதில்லை; பணிக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கின்றனர். தவெக ஆட்சியில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. தவெக ஆட்சிக்கு அக்.6ம் தேதி மக்கள் சரியான பாடத்தை புகட்ட வேண்டும்" என பேசினார்.