Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தவெக கொடிய தீய சக்தி: சீமான் ஆவேசம்

காளையார்கோவில், அக். 28: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அளித்த பேட்டி: தவெக ஆட்சியில் குற்றச்சம்பவங்கள் பெருகுகிறதே என கேள்வி கேட்குறீர்கள். 4 தொகுதியிலயும் தோற்கடிச்சுட்டீங்க.. என் ஊருக்குள் வரவே எனக்கு வெட்கமாயிருக்கு... சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் கொலை சம்பவங்களை நினைத்தால் வெட்கமாக, அவமானமாக இருக்கிறது. அரிசி விலை, பருப்பு விலை, சர்க்கரை விலை, பால் விலை என அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. மின்சார கட்டணம் பல மடங்கு அதிகரித்துவிட்டது. கமிஷனுக்காக ஒரு யூனிட் 35 ரூபாய்க்கு மின்சாரம் வாங்கப்படுகிறது. தவெக என்கிற கட்சி கொடிய தீய சக்தி.

தவெக ஆட்சியில் லஞ்சம் இருக்கிறதா என்கிறீர்கள்.பணமாக கொடுப்பது மட்டும் லஞ்சம் அல்ல. மக்களுக்கு திட்டங்கள் மூலமாக தருவதும் லஞ்சம் தான். யார் காசிலிருந்து கொடுக்கிறார்கள்?.

வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 தருவது என்பது லஞ்சம்தான். விமான எரிபொருளுக்கு வரிசலுகை குறைக்க தேவையில்லை. அரசுக்கு வருவாய் வருவதே குறைவு. இந்நிலையில் பெரு முதலாளிக்கு வரிச்சலுகை ஏன்? அரசுக்கு வருவாய் வருவதையெல்லாம் இலவசமாக்கி விட்டு பெருமுதலாளிக்கு வரிச்சலுகை செய்வதால், மக்களுக்கு என்ன நன்மை. மக்கள் நலன் சார்ந்த திட்டம் எங்கே? இருக்கிறது. அதற்கான செயல் எங்கே இருக்கிறது. எட்டு மணி நேரம் பவர் கட் என அரசே அங்கீகரிக்கிறது. இவ்வாறு கூறினார்.