Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தவெக வேளாண் பட்ஜெட்: தென்னை, மண்வள திட்டங்களின் பெயர்கள் மாற்றம்; 1000 விவசாயிகளுக்கு சோலார் பம்புகள் அறிவிப்பு!

சென்னை: தமிழகப் பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய வேளாண் துறை அமைச்சர் வினோத், தென்னை பதப்படுத்தும் கழகத்திற்கு ரூ.5.30 கோடியும், 500 விவசாய நிலங்களில் பண்ணைக் குட்டைகள் அமைக்க ரூ.8 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், 1000 விவசாயிகளுக்குத் தனித்து சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்பு செட்டுகள் அமைத்துத் தரப்படும்.

மேலும், திமுக அரசு கொண்டு வந்த தென்னை மேம்பாட்டு திட்டம் இனி தென்னை சிறப்பு திட்டம் எனவும், மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் இனி மண்வள பாதுகாப்பு இயக்கம் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 2026-27 நிதியாண்டில் 1 லட்சம் மண்வள அட்டைகள் வழங்கப்படும் என்றும்; அத்துடன் உதகையில் ரூ.10 கோடியில் வேளாண் மையம் தரம் உயர்த்தப்பட்டு, மா, மிளகாய், மஞ்சள் ஆகியவற்றுக்குத் தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்படுவதோடு, வேளாண் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளின் விடுதி வசதிகளும் மேம்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.