Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

டிரம்ப் மகன் உயிருக்கு ரூ.95 கோடி பரிசு ஈரான் டிவி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ: உயிருக்கு அச்சுறுத்தல் பற்றி தெரியும் என அமெரிக்க அதிகாரி தகவல்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் இளைய மகனான பாரன் டிரம்பைக் இலக்கு வைத்து, ஈரான் அரசு தொலைக்காட்சி ஈரான் தொலைக்காட்சியில் பாரன் டிரம்பை எங்கே கொல்வது? என்ற தலைப்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாரன் டிரம்பைக் கொல்பவர்களுக்கு 10 மில்லியன் டாலர் (ரூ.95 கோடி ) பரிசு வழங்கப்படும் என்று அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

பாரன் வசிக்கும் இடம், அவர் செல்லும் வழிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அவரது எக்ஸ்பாக்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் கணக்குகள் கண்காணிக்கப்படுவதாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பாரன் டிரம்பை உளவு பார்த்தல், அவரின் ஆன்லைன் செயல்பாடுகள் மற்றும் அவரது ரகசிய பாதுகாப்பு சேவைகளை எவ்வாறு தாண்டிச் செல்வது என்ற வழிகள் கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

இதன் உண்மை தன்மை மற்றும் அதில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் எதுவும் சரிபார்க்க முடியவில்லை.அமெரிக்க ரகசிய சேவை செய்தி தொடர்பாளர் நெட் ஹெரிங் கூறுகையில், பாரன் டிரம்பின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுப்பது போன்ற ஈரான் தொலைக்காட்சி வீடியோ குறித்து எங்களுக்கு தெரியும். எங்கள் பாதுகாப்பில் உள்ள மக்களுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படக்கூடிய எதுவும் விசாரிக்கப்படும் என்றார்.