டிரையம்ப் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம், கடந்த சில மாதங்களாகவே புதிய மேம்படுத்தப்பட்ட பைக்குகளை அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில் டிரையம்ப் ஸ்பீடு டிவின் 1200 கபே ரேசர் எடிஷன் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கில் 1,200 சிசி லிக்விட் கூல்டு பேரரல் டிவின் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 105 எச்பி பவரையும் 112 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. இரு புறமும் இயங்கக்கூடிய குயிக் ஷிப்டர் ஸ்டாண்டர்டு அம்சமாக இடம் பெற்றுள்ளது.
மேலும் இதில் ஓஹ்லின் சஸ்பென்ஷன், பிரம்போ மோனோபிளாக் பிரேக்குகள், மெட்செலர் ரேஸ்டெக் ஆர்ஆர் கே3 டயர்கள் இடம் பெற்றுள்ளன. ஸ்பெஷல் எடிஷன் என்பதால் சர்வதேச அளவில் மொத்தம் 800 பைக்குகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்தியாவுக்கு எவ்வளவு எண்ணிக்கை ஒதுக்கீடு செய்யப்படும் என்ற விவரத்தை இந்த நிறுவனம் வெளியிடவில்லை. எனினும், இந்தியச்சந்தையில் இதன் ஷோரூம் விலை சுமார் ரூ.17.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


