டிரையம்ப் மோட்டார் சைக்கிள் விற்பனை 1 லட்சம் என்ற மைல்கல்லை தாண்டி விட்டதாக, பஜாஜ் ஆட்டோ நிறவனம் அறிவித்துள்ளது. டிரையம்ப் நிறுவனத்துடன் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2023ம் ஆண்டு 2ம் காலாண்டில் இணைந்து டிரையம்ப் மோட்டார் சைக்கிள்களை சந்தைப்படுத்தியது. இந்தியாவில் தயாரிக்கப்படும் டிரையம்ப் 400, ஜப்பான், ஆஸ்திரேலியா, மெக்சிகோ, தைவான், தென்கொரியா உள்ளிட்ட 18 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டரை ஆண்டுகளில் டிரையம்ப் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை இந்திய சந்தையில் 1 லட்சம் என்ற மைல்கல்லை தாண்டி விட்டதாக பஜாஜ் ஆட்டோ அறிவித்துள்ளது.
+
Advertisement
