அகர்தலா: திரிபுராவில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களை கிராம மக்கள் தாக்கியதில் 3 பேர் காயமடைந்தனர். திரிபுரா மாநிலம் போக்சாநகர் பகுதியில் உள்ள ஆஷாபாரியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்காலம் என்ற சந்தேகத்தின்பேரில் ஒருவரை எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். கிராம மக்கள் கண்மூடித்தனமாக தாக்கியதோடு வீரர்களிடம் இருந்து ஆயுதங்களையும் பறிக்க முயற்சித்தனர். இந்த தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 3 வீரர்கள் காயமடைந்தனர். இந்த சம்பத்தில் தொடர்புடையதாக கருதப்படும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சிலர் கலாம்சவுரா காவல்நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. மாநில முதல்வர் மாணிக் சாகா, வீரர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதற்கிடையே இந்த தாக்குதல் தொடர்பாக 6 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.


