Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

போலீஸ் சம்மனை நிராகரித்தார் திரிணாமுல் எம்.பி.

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜியின் அலுவலகத்தில் கடந்த 27 ஆம் தேதியன்று, அனுமதியற்ற விளம்பரப் பலகையை அகற்றும் பணியின்போது காவல்துறையினரை உள்ளே நுழைய விடாமல் மற்றொரு எம்.பி டெரெக் ஓ பிரையன் தடுத்தார். இந்த மோதல் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி காவல்துறை அனுப்பிய சம்மனை கட்சியின் மூத்த தலைவர் டெரெக் ஓ பிரையன் நிராகரித்தார். இந்த சம்மன் அனுப்பப்பட்டது சரியான நடைமுறை அல்ல என அவரது வழக்கறிஞர்கள் காவல் நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர். இதே வழக்கில் விசாரணைக்கு இன்று ஆஜராகும்படி அபிஷேக் பானர்ஜிக்கும் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.