தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சி பஞ்சப்பூரில் ரூ.17.60 கோடியில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவு!!

Advertisement

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் பகுதியில், மூலதன மானிய நிதி -இயக்குதல் மற்றும் பராமரிப்பு நிதியின் கீழ் ரூ.17.60 கோடி மதிப்பீட்டில் வெளியூர் செல்லும் தனியார் சொகுசு பேருந்து நிலையம் (Omni Bus Stand) அமைப்பதற்கு நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.திருச்சிராப்பள்ளி மாநகரில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாகவும், ஏற்கனவே அமைந்துள்ள இரண்டு பேருந்து நிலையங்கள் போதுமானதாக இல்லாததாலும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டும் தற்போது பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் பகுதியில் வெளியூர் செல்லும் தனியார் சொகுசு பேருந்து நிலையம் (Omni Bus Stand) சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது.

இப்பேருந்து நிலையம், சுமார் 30,849 சதுரடி பரப்பளவிலான இரண்டு பேருந்து நடைமேடைகளுடன் 82 பேருந்துகளை கையாளும் வசதியுடன் 37 எண்ணிக்கையிலான இயக்கப்படும் பேருந்து நிறுத்த தடங்களுடன் மற்றும் 45 எண்ணிக்கையிலான காத்திருப்பு பேருந்து நிறுத்த தடங்களுடன் மொத்தம் 1,42,945 சதுரடி பரப்பளவில் அமையவுள்ளது. மேலும், இப்பேருந்து நிலையம், மழைநீர் வடிகால், சுகாதாரமான குடிநீர், 2 கழிப்பறை வளாகம், 17 இருக்கைகள், 31 சிறுநீர் கழிவறைகள், கண்காணிப்பு கேமிரா, பொதுமக்கள் சேவை மையம் மற்றும் இதர வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் பகுதியில், மூலதன மானிய நிதி - இயக்குதல் மற்றும் பராமரிப்பு நிதியின் கீழ் ரூ.17.60 கோடி மதிப்பீட்டில் வெளியூர் செல்லும் தனியார் சொகுசு பேருந்து நிலையம் (Omni Bus Stand) அமைப்பதற்கு நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளார்கள்.

திருச்சிராப்பள்ளி, பஞ்சப்பூரில் அமையவுள்ள இந்த தனியார் சொகுசு பேருந்து நிலையமானது (Omni Bus Stand) தென்மாவட்டங்களிலிருந்தும், திருச்சிராப்பள்ளி மாநகரிலிருந்தும், சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு இயக்கப்படும் தனியார் சொகுசு பேருந்துகளின் எளிதான போக்குவரத்திற்கும், அவற்றின் ஓட்டுநர் உள்ளிட்ட பணியாளர்களுக்கும், இப்பேருந்து சேவையை பயன்படுத்தும் பொதுமக்களுக்கும், திருச்சிராப்பள்ளி மாநகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கும் பெரும் பயனளிக்கும் வகையில் அமையவுள்ளது.

Advertisement

Related News