Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திருச்சியை எளிதாக வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற்றது கோவை

சென்னை: டிஎன்பிஎல் டி20 லீக் தொடரின் குவாலிபயர்-2 ஆட்டத்தில், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை 84 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை அணி பைனலுக்கு தகுதி பெற்றது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற கோவை கிங்ஸ் கேப்டன் ஷாருக் கான் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். ராதாகிருஷ்ணன், சுரேஷ் லோகேசஷவர் இணைந்து கோவை இன்னிங்சை தொடங்கினர்.

அதிரடி காட்டிய கேப்டன் ஷாருக் கான் 34 ரன் (18 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஈஸ்வரன் பந்துவீச்சில் ராஜ்குமார் வசம் பிடிபட்டார். கோவை கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன் குவித்தது. அம்ப்ரிஷ் 4, மாதவ பிரசாத் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி களமிறங்கியது.

கோவை கிங்ஸ் வீரர் தீபன் லிங்கேஷ் ஹாட்ரிக் சாதனையுடன் அமர்க்களப்படுத்த, அவரை தொடர்ந்து மணிமாறன் சித்தார்த் தனது 4 ஓவரில் 11 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். அந்த அணி 15.4 ஓவரில் 99 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. 84 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற கோவை கிங்ஸ் பைனலுக்கு முன்னேறியது. நாளை நடைபெற உள்ள பரபரப்பான இறுதிப் போட்டியில் மதுரை பேந்தர்ஸ் - கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.