திருச்சியிலுள்ள இந்தியன் இன்ஸ்ட்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டில் நிதி மற்றும் கணக்கு துறையில் நிதி பயிற்றுனர் (பைனான்ஸ் டிரெய்னி) பயிற்சிக்குஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிதி பயிற்றுநர்: (பைனான்ஸ் டிரெய்னி): 2 இடங்கள். சம்பளம்: ரூ.20,000- ரூ.25,000. வயது: 28க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி/ஒபிசி/மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: பி.காம்/எம்.காம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சிஏ/ஐசிஎம்ஏ தேர்ச்சி பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
திருச்சி ஐஐஎம்மால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒரு வருடம் பயிற்சி வழங்கப்படும்.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வுக்கு வரும் போது அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.
www.iimtrichy.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை (26.02.2026.)
