Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எடப்பாடி மீதான வழக்கு விசாரணைக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோவை விமான நிலையத்தில் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவித்துள்ளதாக கூறி முன்னாள் எம்.பி கே.சி.பழனிச்சாமி கோவை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த கோவை நீதிமன்றம், விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க கோரியும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்த நீதிபதி, நான்கு வாரங்களுக்குள் மனுவுக்கு பதில் அளிக்கும்படி கே.சி.பழனிச்சாமிக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.