Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

சிகிச்சைக்கு பணம் கொண்டு சென்றால் வாட்ஸ்அப் ஆதாரம் போதும்: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கையேடு 2026-ஐ தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளிட்டார். தேர்தல் நடத்தை விதிகள் அமலானதை தொடர்ந்து வாகன சோதனைகள் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது அரசு, அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், பொதுமக்கள் ஆகியோரின் அனைத்து நடவடிக்கைகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி பொதுமக்கள் யாரும் தேர்தல் நடவடிக்கைகள் முடியும்வரை அதாவது வரும் மே 6-ந் தேதி வரை தனிநபராக ரூ.50 ஆயிரத்துக்கு மேல் தொகையை எடுத்துச் செல் முடியாது.

அப்படி கொண்டு செல்வதாக இருந்தால், அதற்கான ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பறக்கும் படையினர் அந்தத் தொகையை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், மருத்துவ சிகிச்சைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மருத்துவக் காரணத்திற்கு பொதுமக்கள் ரூ.50,000க்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் அதற்கான ஆதாரத்தை வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளம் வழியாக கூட காண்பித்து பணத்தை எடுத்து செல்லலாம் என்றும் பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது என பறக்கும் படையினருக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் இயல்பாக கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்யக்கூடாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்றும் நகர்புறத்தில் வாக்குப்பதிவை அதிகரிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது என்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.