தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் இரவு நேரங்களில் தூய்மை பணியை அலுவலர்கள் தீவிரப்படுத்த வேண்டும்: மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தல்

Advertisement

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், இரவு நேரங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு, மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருங்களத்தூர் முதல் பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை, முடிச்சூர், தாம்பரம் மார்க்கெட் பகுதிகள், திருநீர்மலை சாலைகள் மற்றும் பம்மல் பேருந்து சாலைகளில் நாள்தோறும் சுமார் 40 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சியில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகள் பல்வேறு வகையான வாகனங்களை கொண்டு குப்பைகளை கையாளும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இதன் தொடர்ச்சியாக தற்போது, பேருந்து சாலைகளில், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இரவு நேரங்களில் தூய்மை பணிகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தூய்மைப் பணிகள் மேற்கொள்ளும்போது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், மாநகராட்சியில் இரவு நேரங்களில் பெருங்களத்தூர் முதல் பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை, முடிச்சூர், தாம்பரம் மார்க்கெட் பகுதிகள், திருநீர்மலை சாலைகள் மற்றும் பம்மல் பேருந்து சாலைகளில் 5 நான்கு சக்கர வாகனங்கள், 3 டிப்பர் லாரிகள், 2 காம்பாக்டர் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், 60 தூய்மை பணியாளர்கள் மூலம் இரவு நேர தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகளை தீவிரப்படுத்த மாநகராட்சியின் அலுவலர்களை நியமித்து, இப்பணிகளை கண்காணித்து, மேலும் துரிதப்படுத்த தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்களின் வருகை, குப்பைகள் சேகரிக்கும் நான்கு சக்கர வாகனங்கள், டிப்பர் லாரிகள் மற்றும் கம்பாக்டர் பயன்பாட்டு எண்ணிக்கையினை உறுதி செய்திடவும், சாலைகள் தூய்மையாக இருப்பதை உறுதிப்படுத்திடவும் அனைத்து தூய்மை பணிகளையும் இரவு நேரங்களிலேயே முடித்து, பொதுமக்களின் போக்குவரத்திற்கு எவ்வித இடையூறுமின்றி பணிகளை நிறைவேற்றவும் அலுவலர்களுக்கு, மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement