Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரயிலின் முதல் வகுப்பில் முதலிரவு அலங்காரம்: டிக்கெட் பரிசோதகர் பணியிடை நீக்கம்

மும்பை: ரயிலில் முதல் வகுப்பு ஏசி படுக்கை வசதி பெட்டியை முதலிரவு அறைபோல் அலங்கரிக்கப்பட்ட வீடியோ வைரலான நிலையில், இந்த செயலில் ஈடுபட்ட நபர் மீது ரயில்வே நிர்வாகம் வழக்குப்பதிவு செய்துள்ளது. நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ஒரு தம்பதியினர், தங்களது முதல் வகுப்பு ஏசி தனி அறை பெட்டியை 'தேன்நிலவு அறையாக' மாற்றி இருந்தனர். இதற்கெனவே ஒரு தனியார் அலங்கரிப்பாளரிடம் கூறி, பலூன்கள், மலர்கள், வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்திருந்தனர்.

இதையடுத்து புதுமண ஜோடிக்காக முதலிரவு அறையாக அலங்காரம் செய்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை கிளப்பியிருந்தது. இந்நிலையில் பாதுகாப்பு விதிமீறலில் ஈடுபட்டதாக, டிக்கெட் பரிசோதகரை ரயில்வே சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் ரயிலில் தீ விபத்தை ஏற்படுத்தக்கூடிய மெழுவர்த்திகள், அலங்கார விளக்குகளை பயன்படுத்தியது குறித்து, உயர்மட்ட விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து பணியின் போது இதனை கவனிக்கத் தவறிய குற்றச்சாட்டில் அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டதுடன், விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.