ரயில் நிலையங்களில் 9000 குழந்தைகள் மீட்பு: ரயில்வேயின் மனிதநேயப் பணி!
டெல்லி: கடந்த 2024ம் ஆண்டில் , ரயில் நிலையங்களில் மட்டும் 9,000 குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளனர். பெற்றோரிடம் கோபம், பெருநகரத்தை சுற்றி பார்க்கும் ஆசை, வறுமை, சமூக பிரச்னை போன்ற காரணங்களால் காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களை மீட்பதிலும், அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதிலும், ரயில்வே பாதுகாப்பு படை முக்கிய பங்காற்றி வருகிறது.
இது தொடர்பாக வெளியான செய்தியில், "இந்திய ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) மற்றும் குழந்தைகள் நலக் குழுக்கள் இணைந்து மேற்கொண்ட சிறப்புப் பணிகளின் மூலம், நாட்டின் பல்வேறு ரயில் நிலையங்களிலிருந்து சுமார் 9,000 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்கள், குடும்பத்தைப் பிரிந்தவர்கள், கடத்தப்பட்டவர்கள், அல்லது ஆபத்தில் சிக்கியவர்கள் போன்ற குழந்தைகள் ரயில் நிலையங்களில் கண்டறியப்பட்டு, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் உதவியை வழங்கி, அவர்களைக் குழந்தைப் பாதுகாப்பு மையங்களில் ஒப்படைக்கும் மகத்தான பணியை ரயில்வே தொடர்ந்து செய்து வருகிறது."இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.