பயிற்சி: டிரேடு அப்ரன்டிஸ்.
மொத்த இடங்கள்: 550.
வயது வரம்பு: 07.01.2025 தேதியின்படி 15 முதல் 24க்குள் இருக்க வேண்டும்.
பயிற்சி காலியிடங்கள் விவரம்:
1. பிட்டர் : 150 இடங்கள் (பொது-75, எஸ்சி-23, எஸ்டி-11, ஒபிசி-41). இவற்றில் 6 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும், 5 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
2. வெல்டர்: (ஜி அண்ட் இ): 180 இடங்கள் (பொது-90, எஸ்சி-27, எஸ்டி-14, ஒபிசி-49). இவற்றில் 7 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும், 5 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
3. மிஷினிஸ்ட்: 20 இடங்கள் (பொது-10, எஸ்சி-3, எஸ்டி-2, ஒபிசி-5). இவற்றில் தலா ஒரு இடம் மாற்றுத்திறனாளிகளுக்கும், முன்னாள் ராணுவத்தினருக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
4. பெயின்டர் (ஜி): 30 இடங்கள் (பொது-15, எஸ்சி-5, எஸ்டி-2, ஒபிசி-8). இவற்றில் தலா ஒரு இடம் மாற்றுத்திறனாளிகளுக்கும், முன்னாள் ராணுவத்தினருக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
5. கார்பென்டர்: 30 இடங்கள் (பொது-15, எஸ்சி-5, எஸ்டி-2, ஒபிசி-8). இவற்றில் தலா ஒரு இடம் மாற்றுத்திறனாளிகளுக்கும், முன்னாள் ராணுவத்தினருக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
6. எலக்ட்ரீசியன்: 70 இடங்கள் (பொது-35, எஸ்சி-11, எஸ்டி-5, ஒபிசி-19). இவற்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 இடங்களும், முன்னாள் ராணுவத்தினருக்கு 2 இடங்களும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
7. ஏர் கண்டிஷனிங் மற்றும் ரெப்ரிஜிரேஷன் மெக்கானிக்: 30 இடங்கள் (பொது-15, எஸ்சி-5, எஸ்டி-2, ஒபிசி-8). இவற்றில் முன்னாள் ராணுவத்தினருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தலா ஒரு இடம் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
8. மெக்கானிக் (மோட்டார் வெஹிகிள்): 20 இடங்கள் (பொது-10, எஸ்சி-3, எஸ்டி-2, ஒபிசி-5). இவற்றில் முன்னாள் ராணுவத்தினருக்கு ஒரு இடம் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
9. எலக்ட்ரிக் மெக்கானிக்: 20 இடங்கள் (பொது-10, எஸ்சி-3, எஸ்டி-2, ஒபிசி-5). இவற்றில் மாற்றுத்திறனாளிக்கும், முன்னாள் ராணுவத்தினருக்கும் ஓரிடம் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவுகள் ஏதாவதொன்றில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். என்சிவிடி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள், ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சியளிக்கப்படும். ரயில்வே விதிமுறைப்படி உதவித் தொகை வழங்கப்படும்.
www.rcf.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.01.2026.


